Thursday, July 2, 2009

காவலர்கள் நமது நண்பர்கள் என்பது உண்மை இல்லையா?

காவலர்கள் நமது நண்பர்கள் என்பது உண்மை இல்லையா?

நாங்கள் ஒரு முறை ஒரு சாலை மறியல் போராட்டத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம். காவலர்கள் எங்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.

31/12/2008 அன்று மாலை 5 மணி அளவில் திருச்சியில் இருந்து சென்னை வரும் வழியில், திண்டிவனம் அருகே போக்குவரத்து தடை பட்டது. 7 கிஂமீ நீளத்திற்கு சாலை எங்கும் வாகனங்கள்.

By Pass Road ஆதலால் கடைகள் எதுவும் இல்லை. எனது 1 1/2 வயது தம்பி பசியில் அழ ஆரம்பித்து விட்டான். மற்ற வாகனங்களில் குழந்தைகள் வயதானவர்கள் என்று எல்லோரும் அவதிக்குள்ளானார்கள்.

நாங்கள் உதவி கேட்டு கைபேசியில் 100 எண் மூலம் காவல் துறையை அணுகினோம்.
மதுரை control room என்றும் local code மூலம் திண்டிவனம் காவல் நிலையத்தை அணுகுங்கள் என்று கூறினார் காவலர்.

code no. தாருங்கள் என்றால் தெரியாது என்றார் காவலர். நீங்கள் தகவல் அனுப்புங்கள் என்றால் தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டார் அவர்.


நாங்கள் திரும்பத் திரும்ப தொடர்பு கொண்டு உதவி கேட்ட போது அவர் அலட்சியமாக, நீங்கள் இது பற்றி பத்திரிகைக்கு எழுங்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.


எனது தந்தை 1 கி. மி நடந்து சென்று தகவல் சேகரித்து வந்தார். சாலையை கடந்து சென்ற கிராம வாசி யாரோ விபத்தில் சிக்கி விட்டதாகவும், இது போல் முன்பும் நடந்ததால் கிராம வாசிகள் பாலம் கட்ட அரசாங்கத்தை பல முறை கேட்டும் எந்த பயனும் இல்லாததால் சாலை மறியல் செய்வதாகவும் தெரிந்து கொண்டோம்.

காவல் துறை நமது நண்பன் என்றால், ஒரு காவல் நிலையத்தில் இருந்து இன்னொரு நிலையத்துக்கு தகவல் தரக் கூட முடியாதா என்ன? அல்லது .code no. கூட அவர்களுக்குத் தெரியாதா?


தகவல் தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. ஆனால் மதுரை காவல் நிலையத்தில் இருந்து திண்டிவனம் காவல் நிலையத்துக்கு தகவல் தர அதிகாரம் இல்லையா அல்லது ஒரு காவல் நிலையத்துக்கும் இன்னொரு காவல் நிலையத்துக்கும் தொடர்பே இல்லையா ?

No comments: